தூத்துக்குடி எம்பவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் பல்சமயஉரையாடல் மன்றம் சார்பில் பல்சமய உறவு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். கிறிஸ்து பிறப்பு விழா தரும் மகிழ்வூட்டும் செய்தி என்ற தலைப்பில் நற்செய்தி நடுவ இயக்குநர் அருட்தந்தை ஸ்டார்வின், சமய விழாக்களும், படிப்பினைகளும் என்ற தலைப்பில் அய்யா வழி கிருஷ்ணவேணி கணேசன், இஸ்லாம் விழாக்கள் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் தூத்துக்குடி மாநகர ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் சம்சுதீன் மஸ்லஹி ஆகியோர் பேசினர்.
மதங்களைக் கடந்த மனித நேயம் அனைவரது வாழ்விலும் அவசியம் எனவும், அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இணைந்து வாழ வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.