தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு உட்பிரிவு சாதிகளை இணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என அரசாணைவெளியிடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனிதசங்கிலி நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலாளர் லாரன்ஸ் தலைமைவகித்தார். மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பாளையங்கோட்டை சாலையில் கைகோத்து மனிதசங்கிலியாக நின்றனர்.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜேசுதாஸ், அரசு விரைவு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சின்னத்துரை, செயலாளர் செல்வக்குமார், மகளிர் அணி மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.