தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்யில் உள்ள அருள்மிகு கற்குவேல்அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா நேற்று நடைபெற்றது.
ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா நடப்பாண்டு கடந்த நவம்பர் 16 -ம் தேதிஅய்யனாருக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாட்களில்தினமும் அய்யனாருக்கு சிறப்புபூஜைகள், வில்லிசை ஆகியவை நடைபெற்றன. டிசம்பர் 13, 14-ம் தேதியன்று கற்குவேல் அய்யனார், மாலையம்மன், ஐவராஜா சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளர்வெட்டுத் திருவிழா நேற்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து கள்ளர் வெட்டுக்கு சுவாமிகள் புறப்பாடும், 4.45 மணிக்கு கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளர் வெட்டுநிகழ்ச்சியும் நடை பெற்றது.
கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டஎஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் ஏடிஎஸ்பி ஹர்ஷ்சிங், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி,கோயில் நிர்வாக அதிகாரி ஜெயகாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.