இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த மணியகாரம்பாளையம் பொதுமக்கள். படம்: இரா.கார்த்திகேயன். 
Regional02

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வழியாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் 52 அழைப்புகள் வரப்பெற்றன. பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர்.

சமூகநீதிக் கட்சி சார்பில் அளிக் கப்பட்ட மனுவில், "திருப்பூர் -காங்கயம் சாலையிலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட பட்டியல் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என அனைவரும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

வீடுகள் ஒதுக்க வேண்டும்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

நெல் கொள்முதல் நிலையம்?

SCROLL FOR NEXT