Regional02

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி விபத்து: பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (42). இவர், நேற்று தனது மகள் ஜெயசித்ராவுடன் இருசக்கர வாகனத்தில் காரணம்பேட்டை சென்றுவிட்டு, பிறகு திரும்பி யுள்ளார். காரணம்பேட்டை -பருவாய் சாலையில், ஜெயசித்ரா அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி விபத்து நிகழ்ந்தது.

இதில், இருவரும் தூக்கிவீசப் பட்டனர். சம்பவ இடத்திலேயே மீனாட்சி உயிரிழந்தார். காயங்க ளுடன் ஜெயசித்ரா தப்பினார். காமநாயக்கன் பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT