Regional02

செஞ்சியில் நிதி நிறுவனத்தில் ரூ. 5.85 லட்சம் கொள்ளை

செய்திப்பிரிவு

செஞ்சி பொன்பத்தி ஏரிக்கரை அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ நேற்று காலை நிதி நிறுவனத்திற்கு வந்தார். அப்போது, ஷட்டர் பாதி திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் இரும்பு பீராவை உடைத்து அதில் இருந்த ரூ. 5 லட்சத்து 85 ஆயிரத்து 545 ஐ கொள்ளையடித்தது தெரிய வந்தது. சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT