Regional01

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி

செய்திப்பிரிவு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசு வழங்கும் இடைநிலை மூலதன கடன் உதவித்தொகை மற்றும் கடன் உத்தரவாத திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கியவு டன் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித்தொகை வழங்கப்படும்.

இத்தொகை மூலம் இந்நிறுவனங்கள் தங்களின் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள இயலும். 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் இத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். இதற்கு 4 சதவீதம் வட்டி ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெற வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்துக்கு 50 சதவீதம் உத்தரவாதத்தை தமிழக அரசு வழங்கும். மேலும், விவரங்கள் அறிய சேலம் மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT