சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை திருச்சிக்கு வந்தது.
அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடைமைகளை விமானநிலைய சுங்க அதிகா ரிகள் சோதனையிட்டனர். அப் போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ஆலத்தூரைச் சேர்ந்த கவுதம் (25) என்பவர் ஆடைகளுக்குள் மறைத்து 909 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கவுதமிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.45.78 லட்சம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.