Regional01

கரூர் மாவட்டத்தில் ரூ.627 கோடியில் புதிய திட்டப் பணிகள் நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் ரூ.627 கோடியி லான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.118.53 கோடியிலான திட்டப் பணிகளை திறந்து வைத்து ரூ.35 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை (டிச.16) காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் பழனிசாமி புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.627 கோடியிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும் வழங்க உள்ளார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வா கிகள், விவசாய சங்க பிரதிநி திகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந் தாய்வு மேற்கொள்ள உள்ளார்.

SCROLL FOR NEXT