Regional02

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் எனக் கோரி திருத்துறைப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கூரை வீடுகள் அனைத் தையும் கான்கிரீட் வீடுகளாக கட்ட வேண்டும், கரோனா மற்றும் தொடர் மழை காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, முன் னாள் எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வையாபுரி ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT