புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம். (அடுத்த படம்) தூத்துக்குடியில் நடைபெற்ற மறியல். (கடைசி படம்) நாகர்கோவிலில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம். படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ். 
Regional01

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது

செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில்போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குஆதரவு தெரிவித்தும், மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ கைவிட வலியுறுத்தியும் விவசாய சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக,காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் போராட்ட குழுஒருங்கிணைப்பாளர் பி.பெரும்படையார், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட14 பெண்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ரிலையன்ஸ் மால் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தமிழ் புலிகள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாகர்கோவில்

தென்காசி

தூத்துக்குடி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நல்லையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்டச்செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டனர். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அருகேயுள்ள மழைநீர் ஓடையில் இறங்கிமத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்ட குழுவினரிடம் எஸ்பி ஜெயக் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எட்டயபுரம் அருகேயுள்ள பிதப்புரம்கிராமத்தைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உறவினருமான விவசாயி ராமசுப்பு (85) என்பவர் திடீரென மயங்கி கீழே சரிந்தார். உடனிருந்த சக விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 164 பேர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT