சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர். 
Regional01

கால்வாயில் முறையாக தண்ணீர் திறக்கக் கோரி சாத்தான்குளத்தில் பாஜகவினர் மறியல், 55 பேர் கைது

செய்திப்பிரிவு

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை புத்தன்தருவை குளத்துக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டபாஜகவினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சடையனேரி கால்வாய் வழியாக சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தக் கால்வாயில் வரும் தண்ணீரை சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதி குளங்களுக்கு பிரித்துஅனுப்பும் வகையில் மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள புத்தன்தருவை குளத்துக்கு குறைவாக தண்ணீர் வரும் வகையிலும், உடன்குடி பகுதிக்கு செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லும் வகையிலும் அதிகாரிகள் மதகுகளை திறந்துவிட்டதாக புகார் எழுந்தது. இதைக்கண்டித்தும், புத்தன்தருவை குளத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடக் கோரியும் பாஜக சார்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கணேசன், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் செந்தில், ஒன்றிய பொதுச் செயலாளர் ராம்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாலையில் அமர்ந்து மறியல் செய்த பாஜகவினர் 55 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலையில்அனைவரும் விடுவிக்கப்பட்ட னர்.

SCROLL FOR NEXT