வேலூர் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே தீக்குளிக்க முயன்ற முதியவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர். அடுத்த படம்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை மீட்ட காவல் துறையினர். 
Regional02

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்க வந்தவர்கள் தற்கொலைக்கு முயற்சி

செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக் குளிக்க முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். பொன்னை எஸ்.என். பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (68), இவரது மனைவி நாகம் மாள் (65) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 4 குடும்பத்தினரை காவல் துறை யினர் சோதனையிட முயன்றனர்.

அப்போது, கேசவன் மற்றும் அவரது மனைவி நாகம்மாள் ஆகி யோர் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதில், கேசவன் மற்றும் நாகம் மாள் தம்பதியினர் உட்பட 5 பேரின் விவசாய நிலங்களை ஆதிதிரா விடர் நலத்துறையினர் கையகப் படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அவர்களை, காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

ராணிப்பேட்டை

பின்னர், திடீரென அவர் மண்ணெண் ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்திய துடன் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரினார்.

பின்னர், காவல் துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர்.

SCROLL FOR NEXT