காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தில் வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி மழை வெள்ளத்தினால் அழுகிய நெல் பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional01

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் இயக்குநர் ஆய்வு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்துறை இயக் குநர் நேற்று ஆய்வு செய்தார்.

குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவெளி, பரங்கிப் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கனகரப்பட்டு, கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாளம், துணிசிரமேடு, காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உட்பட்ட முட்டம், நட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர் உள்ள கிராமங்க ளில் மழை வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட நெல் பயிர்களை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதி விவசாயிகளிடம் பயிர் சேதம் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியது:

'நிவர்',' புரெவி' புயலால் கடலூர், நாகை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. தமிழக அரசு சேதமடைந்த விளைநிலங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் கணக் கெடுப்பு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டர் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று தெரிவித்தார்.

கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன், துணை இயக்கு நர்கள் ரமேஷ், பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்)ஜெயக்குமார், வேளாண் உதவி இயக்குநர்கள் காட்டுமன்னார்கோவில் ஆறுமு கம், கடலூர் பூவராகவன், காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ், தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க மாநில தலைவர் அருள், விவசாய சங்கதலைவர் இளங்கீரன், சங்கர், செல்வக்குமார் மற்றும் வட்டார வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரன் கூறுகையில்," பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிக ளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT