சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், எஸ்பி தீபா கணிக்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional01

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு சேலம் உட்பட 5 மாவட்டங்களில் 69,483 பேர் எழுதினர்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் 24,278 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 17 மையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் தேர்வு நடந்தது.

சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், எஸ்பி தீபா காணிக்கர் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு பணியில் 1,800 போலீஸார் ஈடுபட்டனர்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களில் 18,908 ஆண்களும், 2,801 பெண்களும் தேர்வில் பங்கேற்ற னர். 2,569 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை.

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அயோத்தியாப்பட்டணம் அருகே சேலம்- சென்னை புறவழிச்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், பெரியண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

ஈரோடு

டிஐஜி ஆய்வு

பலத்த பாதுகாப்பு

SCROLL FOR NEXT