கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் வாரவிடுமுறை நாட்களில் ஏற்காட்டுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புரெவி புயல் காரணமாக ஏற்காட்டில் தொடர் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்தது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கனமழையின்போது வெளி யில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்தநிலையில், கடந்த 8 மாதங்களுக்குப் பின்னர் ஏற்காடு ஏரியில் கடந்த 7-ம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, விடுமுறை தினமான நேற்று முன்தினமும், நேற்றும் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
நேற்று ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காக்கள், மான் பூங்கா, காட்சி முனை உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. மேலும், படகு சவாரி செல்ல ஏரியில் கூட்டம் அதிகம் இருந்தது.
இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஏற்காடு ஏரியில் சனிக்கிழமை அன்று 1,490 பேரும், நேற்று 2,200-க்கும் மேற்பட்ட பயணிகளும் படகு சவாரி செய்தனர். படகு சவாரி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சவாரி செய்துள்ளனர், என்றனர்.
அருவியில் குளிக்க தடை