Regional01

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ்.பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரத் தலைவர் எஸ்.விக்கி, பொருளாளர் டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT