Regional01

ரத்த தானம்

செய்திப்பிரிவு

அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள ரஜினிகாந்தை வரவேற்று தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டியில் பச்சைக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 20 அடி உயர ரஜினியின் உருவப் படத்துக்கு முன்பு 60 அடி நீள பச்சைக் கம்பளத்தை ரஜினி ரசிகர்கள் விரித்து பிடித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிக்கு, ரஜினிகாந்த் ரத்ததான கழக நிறுவனர் பூ.திருமாறன் தலைமை வகித்தார்.

ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ரஜினிகாந்த் ரத்த தான கழகம் சார்பில் 3004-வது ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், 56 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர்.

SCROLL FOR NEXT