Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க 40,415 பேர் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,603 வாக்குச்சாவடிகளிலும் 2-வது நாளாக நேற்றும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். மேலும், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கும் சிலர் விண்ணப்பம் செய்தனர்.

இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு பார்வையாளரான மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி பார்வையிட்டார். அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் இதுவரை 57,272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 40,415 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநக ராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டனர்.

தென்காசி மற்றும் கன்னி யாகுமரி மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு பார்வையாளரான மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT