Regional02

பேரல் படகு கவிழ்ந்து ஏரியில் மூழ்கி இறந்தவர் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையை சேர்ந்தவர் ராஜசேகர் (28). இவர் தன் நண்பர் ஜெகநாதனுடன் இரண்டு ஆயில் பேரல்களை இணைத்து, அதன் மேல் மரப்பலகையை வைத்து. படகு போல உருவாக்கி நேற்று முன்தினம் பிற்பகல் அங்குள்ள ஏரியில் படகை இயக்கியுள்ளார்.

அப்போது அந்த பேரல் படகு கவிழ்ந்ததில் ராஜசேகர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். உடன் தண்ணீரில் விழுந்த ஜெகநாதன் நீந்திவெளியேறி, வானூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஏரியில் மூழ்கிய ராஜசேகரை தேடினர். நேற்று காலை அவரது உடல் ஏரியில் மிதந்தது. உடலை மீட்ட வானூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT