டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை தத்தனேரி மேம்பாலம் அருகே நேற்று ஏர் கலப்பை ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional01

மதுரையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

செய்திப்பிரிவு

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை செல்லூர்-தத்தனேரி மேம்பாலம் அருகே ஏர் கலப்பை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மாநகர் மாவட்ட தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹசன், செய்யதுபாபு, முருகன், மணிமாறன், போஸ், தங்கராமன், வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT