Regional01

மதுரையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் அளித்த கோரிக்கை மனு

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைந்து முடிக்காததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. குடிநீர், பாதாளச் சாக்கடை, தொலை பேசி உள்ளிட்ட பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படுவதில்லை. இப் பள்ளங்களில் மழை நீர் தேங்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பெரியார் பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள், நான்கு மாசி வீதிகள், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், தெற்குவாசல், முனிச்சாலை, செல்லூர் 60 அடி ரோடு எனப் பல்வேறு சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் புதிய சாலைகள் அமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை அடைப்புகளை உடனே சரி செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT