தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே டி.மேட்டுபட்டியிலும், கல்லணை கிராமத்திலும் ரூ.1 கோடி மதிப்பில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான
பூமி பூஜை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராம்குமார், ஒன்றியக் கவுன்சிலர் பிரபு, ஆணையாளர் வள்ளி, ஊராட்சி மன்றத் தலைவர் கூடம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.