Regional01

கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பதை தடுக்க வேண்டும் ஆட்சியருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசனம் மற்றும் பருவ மழையால் நெல் விவசாயப் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நெற்பயிர்களுக்குரிய உரங்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன. மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் செயல்படும் உர விற்பனை கடைகளில், உரங்கள் இருப்பு இல்லை எனக் கூறுகின்றனர். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். குறிப்பாக அம்மோனியம் குளோரைடு ஒரு மூட்டை அரசு நிர்ணய விலை (50 கிலோ) ரூ.650. ஆனால், ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கின்றனர். அம்மோனியம் சல்பேட் மூட்டை (50 கிலோ) ரூ.660. ஆனால் ரூ.700 வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவ சாயிகளுக்கு உரங்கள் உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT