Regional01

தேசிய லோக் அதாலத்தில் ரூ.9.63 கோடி இழப்பீடு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் ரூ.9.63 கோடி இழப்பீடு வழங்கப் பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய அளவிலான லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. 22 அமர்வுகளில் விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் என 2,400 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. முதன்மை மாவட்ட நீதிபதி (கூடுதல் பொறுப்பு) பி.மதுசூதனன், நீதிபதிகள் எஸ்.கிருபாகரன் மதுரம், வி.தீபா, இன்பகார்த்திக் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

இதில் 1,018 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரத்து 395 நிவாரணம் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(45) 2018-ல் சென்னையில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். அவருக்கு ரூ.40.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.மோகன்ராம் வாதிட்டார்.

SCROLL FOR NEXT