மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூலிகை பண்ணையைத் திறந்துவைத்து மூலிகை செடியை நடுகிறார் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா. 
Regional03

அரசு பள்ளியில் மூலிகை பண்ணை அமைப்பு

செய்திப்பிரிவு

தலைமை ஆசிரியர் சுசித்ரா தலைமை வகித்தார். மதுரை மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா மூலிகைப் பண்ணையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மதுரை மாவட்ட துணை அவைத் தலைவர் வி.எம்.ஜோஸ், இந்தியன் வங்கி ஒத்தக்கடை கிளை மேலாளர் பிரபாகரன், செஞ்சிலுவை சங்கச் செயலர் எம்.கோபாலகிருஷ்ணன், யா.ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி, மேலூர் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட துளசி, வல்லாரை, தூதுவளை, பச்சிலை, சிறியாநங்கை, பெரியாநங்கை, நொச்சி, மருளு, மருதாணி ஆகிய மூலிகைச் செடிகளுடன் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் உள்ள மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SCROLL FOR NEXT