இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவரது பிறந்த நாளையொட்டி கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் ரசிகர்கள் நேற்று யாகம் நடத்தினர். தொடர்ந்து கடைசி ஆண்டாக மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டனர்.
இதேபோல் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தும், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், பிறந்த நாளைக் கொண்டாடினர்.