திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் 500 மூட்டை மஞ்சள் ரூ.15 லட்சம் மதிப்பில் ஏலம் விடப்பட்டது.
திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி நேற்று திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.5,599 முதல் ரூ.6,199 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.5,022 முதல் ரூ.5,759 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.10,085 முதல் ரூ.11,909 வரையும் ஏலம் போனது. மொத்தம் 500 மூட்டை மஞ்சள் ரூ.15 லட்சம் மதிப்பில் ஏலத்தில் விற்கப்பட்டது.