திருநெல்வேலி கரையிருப்பில் புறக்காவல் நிலையத்தை காவல் ஆணையர் தீபக் தாமோர் திறந்து வைத்தார். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

கரையிருப்பில் புறக்காவல் நிலையம் திறப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி கரையிருப்பில் புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் திறந்து வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தச்சநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் முருகனின் நினைவாக இந்த புறக்காவல் நிலையத்தை அவர்களது குடும்பத்தினர் கட்டி கொடுத்துள்ளனர். புறக்காவல் நிலையத்தினுள் சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், திருநெல்வேலி உதவி ஆணையர் சதீஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT