வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமை யிலான குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட காஸ் சிலிண்டர்கள்.படம்:வி.எம்.மணிநாதன். 
Regional01

40 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

வழங்கல் துறையினர் நடத்திய சோதனையில் கடைகளில் பயன் படுத்திய 40 வீட்டு உபயோக சிலிண் டர்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களை சிலர் வணிக நோக்கில் கடைகளில் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு அதிக புகார்கள் வரப்பெற்றன.

இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமையில் பறக் கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ் வரன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கள் நேற்று திடீர் சோதனையில் ஈடு பட்டனர். வேலூர், காட்பாடி, குடியாத் தம், திருவலம், சேர்க்காடு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 சிலிண் டர்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT