ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். இவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று நேற்று வீடு திரும்பிய போது, முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக் கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதலிருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு யுவராஜ் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராடு, கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.