Regional02

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.12), நாளை (டிச.13) ஆகிய 2 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது.

பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், திருத்தம் செய்யவிரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரு தொகுதிக்குள் குடியிருப்புமாறியவர்கள், முகவரி மாற்றம்செய்வோர் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் www.nvsp.inஎன்றஇணையதளம் மூலமாகவும், voter Helpline என்ற அலைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT