விழுப்புரம் மாவட்டத்தில் `நிவர்'புயலால் 900 மின் கம்பங்கள், 50 மின்மாற்றிகள் சேதமடைந்தன.
இந்தச் சேதங்களை ஆய்வுசெய்ய தமிழ்நாடு மின்வாரியதலைவர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று விழுப்புரத்திற்கு நேரில் வந்தார்.
தலைமை செயற்பொறியாளர் துரைசாமியிடம் சேத விவரங் களை கேட்டறிந்தார்.
அதன்பின்னர் விழுப்புரம் வள்ளலார் நகர், என்எஸ்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகளை பார்வையிட்டார்.
அப்போது கண்காணிப்பு பொறியாளர் குமாரசாமி, செயற் பொறியாளர் மதனகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்திற்கு சென்றார்.