Regional02

கோமுகி தடுப்பணையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட கடந்த 4-ம் தேதி கருணாபுரம் தடுப்பணைக்குச் சென்ற 3 சிறுவர்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில், ராஜ்குமார் (16) என்பவர் மீட்கப் பட்டார். தேவந்திரன் மகன் வரதரா ஜன் (15) என்பவர் ஆற்றில் சிக்கிஉயிரிழந்தார். ராமு மகன் அஸ்வந்த் (15) மாயமானார். இவரை தீயணைப்புத் துறையினர் கடந்த8 தினங்களாக ஆற்றில் தேடிவந்தனர். இந்நிலையில் அஸ்வந் தின் உடல் கோமுகி ஆற்றில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டது.

SCROLL FOR NEXT