Regional01

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

அரசு, உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்விச் சட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வித்தொகை கோரி அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலே விண்ணப்பங்களைப் பெற்று அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை மதுரை ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT