Regional01

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி நீர் திறப்பு

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 7,608 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை 7,641 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலை முதல் விநாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று முன் தினம் 104.34 அடியில் இருந்து, நேற்று காலை 104.74 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 71.12 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT