சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் காணொலிக்காட்சி மூலம் நடந்த, பயன்பாட்டு அறிவியல், தொழில் நுட்பம், மேலாண்மை மற்றும் மொழி ஆய்வுகள் பற்றிய சர்வதேச மாநாட்டை சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 
Regional02

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மாநாடு தொடக்க விழா

செய்திப்பிரிவு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பயன்பாட்டு அறிவியல், தொழில் நுட்பம், மேலாண்மை மற்றும் மொழி ஆய்வுகள் பற்றிய சர்வதேச மாநாடு காணொலிக்காட்சி மூலம் நடந்தது.

சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவுக்கு சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தனர். கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கனடா நாட்டிலிருந்து டொரண்டொ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குமார்மூர்த்தி காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டார். மாநாட்டை தொடங்கி வைத்து வள்ளியப்பா பேசும்போது, “தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், பங்களிப்பும் இன்றைய சமுதாயத்தின் முக்கிய தேவை” என்ற நோக்கத்துடன் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது,’’ என்றார். துணைத்தலைவர்கள் சொக்கு மற்றும் தியாகு வள்ளியப்பா பேசும்போது, ‘இன்றைய சூழ்நிலையில் ஆராய்ச்சியுடன் கூடிய தொழில் வளர்ச்சி நாட்டின் எதிர்காலம் என்பதை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்துவது இந்த மாநாட்டின் சிறப்பு,’ என்றனர்.

இம்மாநாட்டின் ஒருங்கிணை பாளர் பேராசிரியர் சந்திரசேகர் பேசும்போது, ‘மாநாட்டில் சுமார் 1500 கருத்தரங்க கட்டுரைகள் பங்குபெற்றன. மேலும் சுமார் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா, ருமேனியா, ஓமன், இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர்,’ என்றார். 

SCROLL FOR NEXT