Regional02

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ இயக்கம் டிச.15-ல் மீண்டும் தொடக்கம் பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தகவல்

செய்திப்பிரிவு

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற இயக்கம் டிச.15 -ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற இயக்கம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிச.8-ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது, 2 கிராமங்களில் நடைபெற்ற இந்த இயக்கம், பின்னர் பிற இயக்கப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த இயக்கம் மீண்டும் டிச.15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த இயக் கத்தை 1,000 கிராமங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங் களில் அதிகமான இடங்களில் நடை பெறும். இதில், விவசாயிகள், பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படும். மேலும், மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்களை சந்திக்கத் திட்ட மிட்டுள்ளோம். இதில் கட்சி யின் அனைத்துத் தலைவர்களும் பங் கேற்பார்கள்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிக ளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். ஆனால், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன என்றார்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ, மாவட்டப் பார்வையாளர் எஸ்.பி.அண்ணாமலை உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT