தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வேளாண் துறை சார்பில் உலக மண்வள தின விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் கனகம்மாள் வரவேற்றார். ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி அரசப்பன், ஓய்வுபெற்ற பேராசிரியர் விஜயலட்சுமி, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி இளவரசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு விநாடி வினா நடத்தப்பட்டது. தென்காசிமாவட்ட அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியை நடத்தினார்.விழுதுகள் அறக்கட்டளை தலைவா் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.