தூத்துக்குடி வாகைகுளத்தில் அமைந்துள்ள பால்வள கூட்டுறவுதுணைப் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆவின் தலைவர் சின்னத்துரை பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 165 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் சார்பில் நாள் ஒன்றுக்கு 35,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் புதிதாக கோவில்பட்டி, கயத்தாறு, செக்காரக்குடி ஆகிய இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15 ஆயிரம் லிட்டர் பால் கையாளப்படும்.
கால்நடை தீவன வங்கி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 5 ஏக்கர் இடம் இருந்தால் 100 சதவீதத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும், 2019-2020-ம் ஆண்டுக்கான லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.1.50 வரைஊக்கத்தொகை வழங்க விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்ட ஆவின் மூலம் 50 ஆயிரம் லிட்டர் பாலை கையாளும் வகையில் விரைவில் அதிநவீன பால்பண்ணை அமைக்கப்படவுள்ளது. ஆவின் மூலம்ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை பணப்பட்டுவாடா தாமதமின்றி வழங்கப்படுகிறது. அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் பால் கேன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்றார்.
கூட்டத்தில், கூட்டுறவு துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேசன், ஆவின் பொதுமேலாளர் சி.ராமசாமி, உதவிப் பொது மேலாளர் சாந்தி (விற்பனை), திட்ட மேலாளர் சாந்தகுமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.1.50 வரை ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்.