திருவண்ணாமலையில் பாரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
Regional02

பாரதியார் பிறந்த நாள் விழா

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மற்றும் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் சார்பில். பாரதியாரின் 139-வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று நடைபெற்றது.

தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் இந்திரராஜன் தலைமை வகித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தமிழ்ச் சங்க புரவலர் சின்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபுலிங்கம் வரவேற்றார். நந்தினி பதிப்பகம் நிறுவனர் சண்முகம், நல்லாசிரியர் பலராமன், தொழிலதிபர் சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில், மாவட்ட இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT