தி.மலையில் பைனான்சியர் கொலை வழக்கில் வேலூர் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மலை காந்தி நகரில் வசித்து வந்த பைனான்சியர் பாபு என்பவர் கடந்த 3-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தி.மலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருவண்ணாமலை நகர அதிமுக முன்னாள் செயலாளர் கனகராஜ் கொலைக்கு பழி தீர்க்க, பாபுவை கொலை செய்துள்ளதும், இதில் கூலிப்படையினர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கனகராஜ் மனைவி ஞானசவுந்தரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கூலிப் படையைச் சேர்ந்த வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரி(23), முள்ளிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார்(19), காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த குருவி சுரேஷ்(33) ஆகியோரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.
இதன்மூலம் பாபு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந் துள்ளது. மேலும், பலரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.