வழிகாட்டும் பயிற்சி முகாமில் பேசும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 
Regional01

சிறந்த மாநிலமாகத் திகழும் தமிழகம் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேச்சு

செய்திப்பிரிவு

அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் இளைஞர், இளம் பெண்களுக்கு வழிகாட்டும் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது:

கல்வி, சுகாதாரம், வேளாண்மை, அடிப்படைத் திட்டங்கள், குடிநீர் வசதிகள், வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் உள்ள எட்டரை கோடி மக்களுக்கும் நாள்தோறும் திட்டங்களை அறிவித்து மக்கள் நலனே தன்னலம் என்று முதல் வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

ஆனால், முதல்வரின் செல்வாக்கைக் கண்டு பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை மறைக்கும் வண்ணம் தினந் தோறும் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்து தனிநபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தி வருங்கால இளைய சமுதாயத்துக்குத் தேவையான அனைத்து தொலைநோக்குத் திட்டங்களையும் முதல்வர் வழங்கி வருகிறார்.

எனவே, அதிமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் வண்ணம் முதல்வரின் சாதனைத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்களாகச் செயல் பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT