மனித உரிமை காப்பாளர்கள் மீது கைது நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி நாட்டைக் காப்போம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனித உரிமை காப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, கைது செய்யப்படுகின்றனர். இதுபோன்று கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தி மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாட்டைக் காப்போம் அமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு ஒருங் கிணைப் பாளர் சி.ஜே.ராஜன் தலைமை வகித்தார். தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்பி மு.சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மதிமுக தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச் செயலாளர் மகபூப்ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் எல்லா லன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டைக் காப் போம் அமைப்பினர் சந்தானம், பால்பிரிட்டோ உட்பட பலர் பங்கேற்றனர்.