Regional02

மருத்துவக் கல்லூரியில் சேர மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்த மாணவி மாரீஸ்வரி இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் பயில வே.தங்கபாண்டியன் அறக்கட்டளை சார்பில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று முன்தினம் நிதி உதவி வழங்கப்பட்டது. மாணவி மாரீஸ்வரிக்கு அறக்கட்டளையின் தலைவர் மணிமேகலை தங்கம்தென்னரசு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில், திருச்சுழி திமுக ஒன்றியச் செயலாளர் சந்தனபாண்டியன், நிர்வாகிகள் பிச்சைநாதன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT