Regional02

எலைட் மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சிறப்பு பயிற்சி பெறும் (எலைட்) அரசுப் பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆட்சியர் கூறியதாவது: அரசு உள் ஒதுக்கீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர் மருத்துவப் படிப்புக்கும், 4 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்புக்கும் என 9 பேர் பயன் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி (எலைட்) வகுப்பில் மொத்தம் 36 அரசு பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT