மதுரை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலையில் சகோதரர்கள் உட்பட 11 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் செக்கா னூரணி கொக்குளத்தைச் சேர்ந் தவர் செந்தில்(35). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். நேற்று முன்தினம் மாலை அவரை சிலர் வழிமறித்து தகராறு செய்துவிட்டுச் சென்றனர். பின்னர் அக்கும்பலைச் சேர்ந்த பரமன், செந்திலுக்கு போன் செய்து வரவழைத்தார். மேலக்கால் சாலையில் பன்னியான் விலக்கு பகுதிக்கு செந்தில் சென்றபோது அங்கு தயாராக இருந்த பரமன் உள்ளிட்ட சிலர் செந்திலை வெட்டிக் கொன்று தப்பினர். செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
2017 செப். 30-ம் தேதி சில வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் செந்திலைத் தட்டிக்கேட்டனர். இதனால், செந்திலுக்கும், பரமன் தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பரமன், ராமச்சந்திரன், வேல்முருகன், கொடிபுலி, பாண்டி, சிவனாண்டி, காசி, கணேசன், வயக்காடு, மற்றொரு வயக்காடு, அவரது சகோதரர் ஆனந்த் ஆகிய 11 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.