சிஐடியூ பால் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மதுரை ஆவின் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆவின் பால் முகவர்களுக்கு பால்வளத் துறை மற்றும் மதுரை ஆவின் நிர்வாகம் கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும். முகவ ர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டெப் போக்களுக்கு லீக்கேஜ் பால் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட் டத் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பாலாஜி, மாநில துணைப் பொதுச்செயலாளர் ரா.லெனின், கூட்டுறவு சங்க ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.எஸ்.அமர் நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.