தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை யில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் மு.ராஜசேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கடந்த 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 27,000 டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந் தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு விண்ணப்பம் அனுப்பும் இயக்கத்தை மாநில அளவில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் மாநில தலைவராக கு.பால் பாண்டியன், மாநில பொதுச்செயலாளராக மு.ராஜ சேகர், மாநில பொருளாளராக சு.அறிவழகன், துணைத் தலைவர்களாக என்.கோபிநாத், பி.கே.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.