Regional01

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன.

காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் வருமாறு: 21 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ், ஆங்கிலம் தலா 3, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், வரலாறு தலா 2 இடங்கள் மற்றும் ஒரு உயிரியியல் ) 37 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ், சமூக அறிவியல் தலா 4 இடங்கள், ஆங்கிலம், கணிதம் தலா 11, அறிவியல் 7) மற்றும் 6 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 305-ல் உள்ள பழங்குடியினர் நலதிட்ட அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி வரை அலுவலக நேரங்களில் அளிக்கலாம்.

மேலும், விண்ணப்பங்களை திட்டஅலுவலர், பழங்குடியினர் நலம், சேலம் என்ற முகவரிக்கு வரும் 24-ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும்.

SCROLL FOR NEXT